ப் எஸ்.டி. தியாகராஜன், கோவைப் புதூர்.
ஒரு செயல் நூறு சதவிகிதம் வெற்றி யடைய எவ்விதமாக செயல்பட வேண்டும்? நட்சத்திரம், லக்னபலம், தாராபலம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்று சொல்கிறார்கள். எப்படி பார்ப்பதென்பதை விளக்கிச் சொல்லவேண்டும்.
ஒரு செயல் நூறு சதவிகிதம் வெற்றி யடைய ஒரு முழுமையான சுப முகூர்த்தம் அவசியம். ஆனால் நிறைவான முகூர்த்த வேளையென்பது தேவர்க்கும் கிடைப்பதரிது என்கின்றன மூல ஜோதிட நூல்கள். லக்னபலம் என்பது ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கவேண்டும். விவாகத்திற்கு லக்ன 7-ஆமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். இவ்விதம் லக்னம் பார்ப்பது, குறிப்பதே மாறுபாடாக அமையும். இதேபோல் நட்சத்திரம் மற்றும் நாளின் சுபத்தன்மைக்கு தாராபலன் பார்ப்பது வழக்கமாக உள்ளது. இதனை முழுமையாக அறிய ஜோதிடம் கற்கவேண்டியது அவசியம்.
ப் என்.வி.என். சாக்ரட்டீஸ்.
என் மகன் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். வேலை, திருமணம், ஆயுள் பலம் பற்றிக் கூறவும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lakshmi_44.jpg)
மகன் தியாகராஜன் 31-10-1989-ல் பிறந்த வர். விருச்சிக லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். ஆயுள் காரகன் சனியை, குரு பார்ப்பதால் தீர்க்காயுள் ஜாதகம். சனி, 8-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் இது உறுதியாகிறது. எனவே ஆயுள்பற்றிய பயம் தேவையில்லை. இவரது லக்னாதி பதி செவ்வாய் 12-ல் அமர்ந்து, கூடவே நீசபங்க சூரியன், புதன், சந்திரன் என நான்கு கிரகக் கூட்டணி. இது சந்நியாச யோகம் தரும். இவரது லக்னாதிபதிக்கும் 7-ஆம் அதிபதிக்கும் சம்பந்தமில்லை. ஆனால் லக்னாதிபதி செவ்வாய், 11-ஆம் அதிபதி புதனுடன் இணைந்து நிற்கிறார். எனவே, இவருக்கு மறுமணப் பெண்ணுடன் திருமணம் நடக்கும். வேலை, தொழில் எல்லாம் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி 2024, அக்டோபர் வரை. கோட்சாரத்தில் 2023, சித்திரை மாதம் மறுமணம் நடக்க வாய்ப்புள்ளது. இது இவருக்கு இஷ்ட திருமணமாக அமையும். இவருடைய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய குற்றம் வலுத்திருப்பதால், எந்தச் செயலும் பொலிவின்றி உள்ளது. இவ்விதம் பலவிதங்களிலும் துன்பப்படும் ஜாதகர்கள், புதுச்சேரி தவளைக்குப்பம் அருகில், அபிஷேகப் பாக்கம் சிங்கிரி கோவிலை தரிசனம் செய்து, பின் பூவரசங்குப்பம் ஸ்ரீட்சுமி நரசிம்மரை வணங்கிவிட்டு, பின் திருக் கோவிலூர்- அரகண்ட நல்லூர்- அந்தி- நரசிம்மரை வழிபட்டால் அதிக கஷ்டங் களும் விலகியோடும்.
ப் ஆர். தேவேந்திரன், விழுப்புரம்.
என் ஜாதகம் அனுப்பியுள்ளேன். மனைவி பிரிந்து சென்றுவிட்டார். என் எதிர்காலம் மற்றும் ஆயுள் பற்றிக் கூறவும்?
நீங்கள் 24-11-1976-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். உங்கள் 7-ஆம் அதிபதி சனி 12-ல் இருப்பதால் முதல் மனைவி பிரிவு ஏற்பட்டுள்ளது. நடப்பு ராகு தசை. இதில் புதன் புக்தி 2023 ஆகஸ்ட் வரை, இதற்குள் உங்களைப்போல வாழ்க்கையில் தோல்வி கண்ட பெண்ணுடன் மறுமணம் நடக்கும். இவ்விதம் மறுமணம் நடக்கவிருப்ப வர்கள், அந்தத் திருமணம் நல்லபடியாக நடந்து, வாழ்வு செழிப்புப் பெற, மயிலாடு துறை மாப்படி சுமங்கலி கோவில் சென்று வழிபடவும். மேற்கண்ட ஜாதகர் ஆயுள் விஷயம் பற்றியும் கேட்டுள்ளார். சனி 12-ல் மறைந் ததும். 8-ஆம் அதிபதி சற்று பலவீனமாக இருப்பதாலும் இவ்வாறு பயம் தோன்றியுள்ளது. கோவை, சத்தியமங்கலம் சாலையிலுள்ள கோவில்பாளையம் என்ற திருத்தலத்தில், ஸ்ரீகாலகாலேஸ்வரர் சுவாமியை வணங்க, ஆயுள் பற்றிய பயம் நீங்கி ஆயுள் விருத்தியடையும்.
ப் ரா. விஸ்வநாதன் உளுந்தூர்பேட்டை.
முக்கு அடைப்புக்காக ஆபரேஷன் செய்தும், சளித்தொல்லை சரியாவில்லை. இரவு தூக்கமும் வருவதில்லை. விடிவு காலம் எப்போது?
நீங்கள் 23-5-1955-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். ஒருவரின் நோய்பற்றி அறிய அவரின் 6-ஆமிடத்தை ஆராய வேண்டும். உங்கள் 6-ஆம் அதிபதி புதன் 3-ஆமிடத்தில் அமர்ந்துள்ளார். புதன் நெற்றியைக் குறிக்கும் கிரகம். புதன் சாரம் வாங்கிய செவ்வாய் புருவத்தைக் குறிப்பார். நடப்பு புதன் தசை. இதனால் உங்களுக்கு நெற்றியில், புருவ மத்தியில் ஏதோவொரு பிரச்சினை உள்ளது. மேலும் உங்கள் ஜாதகத்தில் 3-ஆமிடத்தில் புதன், செவ்வாய், கேது இணைவும் உள்ளது. செவ்வாய் சம்பந்தம் அறுவை சிகிச்சையைக் கொடுத்துள்ளது. நடப்பு புதன் தசையில், சந்திர புக்தி. ஏதேனும் யுனானி சிகிச்சையை மேற்கொள்வது நலம். சந்திரன் உச்சமாகியிருப்பதால், நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. இவ்விதம் தலை சம்பந்தப்பட்ட பிரச்சினையுள்ளவர்கள் கும்பகோணம்- திருந்துதேவன்குடி என்ற தலத்தில் வணங்கி, அங்கு தரப்படும் அபிஷேக தைலத்தை உட்கொண்டால், சந்திரன் சார்ந்த- அதாவது சளி போன்ற பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
ப் ஜோதிலட்சுமி, விக்கிரவாண்டி.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனின் திருமணம் எப்போது நடக்கும்? தாய்க்கு கிரியை செய்யும் காலம் நெருங்கிவிட்டதா? பரிகாரம் கூறவும்.
மகன் வசுதேவன் 30-9-1996-ல் பிறந்த வர். கடக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்ன நீச செவ்வாய், சந்திரனின் பரிவர்த்தனையால் நீசபங்கமாகியுள்ளார். நடப்பு சந்திர தசை. இதில் சுக்கிரபுக்தி, 2024 ஜூலைவரை. இதற்குள் இவருக்குத் திருமணமாகிவிடும். 2025-க்குப்பிறகு செவ்வாய் தசை ஏழு வருடங்கள் நடக்கும். இந்த வருடங்களில், இவரது தாயார் நலன் கவனிக்கப்பட வேண்டும். இந்த ஜாதகம் பித்ரு தோஷ ஜாதகம். இவ்விதம் பித்ரு தோஷமுடையவர்கள். கும்பகோணம்- ஆவூர் பஞ்ச பைரவரை வணங்குவது நல்லது.
ப் ஆ. பலராமன், நெல்லிக்குப்பம்.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? திருமணத்திற்குமுன் தந்தைக்கு மாரகம் ஏற்படுமா? என் மனைவி மனநிலை சரியில்லாதவர். மருமகள் வந்தால் ஒரு வழி பிறக்குமா என கருதுகிறேன். தயவுசெய்து பதில் கூறவேண்டுகிறேன்.
மகன் சரநாராயணன் 28-7-1993-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. நாகதோஷம் உள்ளது. லக்னத்துக்கு 8-ல், ராசிக்கு 4-ல் செவ்வாய் உள்ளதால். செவ்வாய் தோஷம் இருக்கிறது. ஏழாமதிபதி சுக்கிரன் உச்சம். 5, 7-ஆமதிபதி பார்வை. உங்கள் சொந்தத்தில், மிகத் தெரிந்த பெண்ணாக அமைவார். நீங்கள் நினைத்தப்படி மருமகள் வந்தவுடன் குடும்ப நிலை சீரடையும். நடப்பு கேது தசையில் ராகு புக்தி 2023, நவம்பர்வரை. இதில் அதிக கஷ்டம் வரும். அடுத்து அமையும் குரு புக்தி திருமணத்தையும். நல்ல மருமகளையும் அழைத்துவரும். இந்த ஜாதகத்தில் நடப்பு கேது தசை செவ்வாய் சாரம் எடுத்துள்ளது. எனவே கேது தசை நல்ல பலன்தர, அங்காரக சதுர்த்தியன்று கணபதியை வணங்கவேண்டும். இதற்குரிய தலம் திருமலைக்கோட்டை சோடஸ கணபதி ஆவார். செவ்வாய்க்கிழமை வரும் சதுர்த்தியன்று மலைக்கோவிலை பிரதட்சணம் செய்வது நலம்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/lakshmi-t.jpg)